வாட்ஸ்-அப் ல அசத்தல் அப்டேட்!! உடனே செட்டிங்க்ஸ்ல இதை மாத்துங்க!!

 

வாட்ச்ஸ்-அப் ல இந்த புது ஆப்ஷனைத் தெரிஞ்சுக்கோங்க… உடனே உங்க வாட்ஸ்-அப் செட்டிங்ஸ் சென்று உங்க வசதிக்கு இதை அப்டேட் செய்து கொள்ளலாம்.

தற்போதுள்ள தகவல் தொழில்நுப்டத்தில் பணபரிவர்த்தனைகள் அனைத்தும் விரல் நுனியில் இருக்கிறது. அந்த வகையில் தகவல் பரிமாற்ற செயலியாக அனைவரது மொபைலில் இருக்கும் ஆப் வாட்ஸ் அப். இதன் மூலமே மெசேஜ்கள், படங்கள், வீடியோக்கள், குரல் பதிவுகளை நண்பர்களிடமும் உறவினர்களிடம் பகிர்ந்து கொள்கின்றனர்.

தற்போது வர்த்தகப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தும் வகையில் தொழில்நுப்ட மேம்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி Google Pay, Paytm செயலிகளை போலவே வாட்ஸ் அப் மூலமே எளிதான முறையில் பணப் பரிவர்த்தனை செய்ய இந்த முறை அறிமுகப் படுத்தப்பட்டது. இதற்கு முதலில் வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்கை வாட்ஸ் அப் செயலியோடு இணைக்க வேண்டும்.

வாட்ஸ் அப் செயலியைப் பயன்படுத்தி வங்கிக் கணக்கில் இருக்கும் சேமிப்புத் தொகையையும் அறிந்து கொள்ளலாம். இதற்கு 2 முறைகள் உள்ளன.

ஸ்மார்ட்போனில் வாட்ஸ் அப் செயலிக்குள் சென்று, Settings ஆப்ஷனை அழுத்த வேண்டும்.

அதில் `Payments’ ல் நுழைந்து, தேவையான வங்கிக் கணக்கைத் தேர்வு செய்யவும்.

அதனுள் ‘View Account Balance’ ஐ கிளிக் செய்து PIN நம்பரை இடவும்.

PIN நம்பர் செலுத்தியதும், வங்கிக் கணக்கில் வைக்கப்பட்டிருக்கும் சேமிப்புத் தொகை தெரிய வரும்.

வாட்ஸ் அப் மூலம் மற்றவர்களுக்கு பணம் அனுப்பினால்

பணப் பரிவர்த்தனையில் available payment method என்ற ஆப்ஷனை செலக்ட் செய்யவும்.

எந்த வங்கிக் கணக்கிலுள்ள சேமிப்புத் தொகையைப் பார்க்க வேண்டும் எனக் குறிப்பிடவும்.

அதனுள் சென்று, ‘View Account Balance’ ல் PIN நம்பரைச் செலுத்த வேண்டும்.

சேமிப்புத் தொகை ஸ்க்ரீனில் காட்டப்படும்.