மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 30,000 கன அடி தண்ணீர் திறப்பு

 

கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தொடர்ந்து உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதற்கிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மீண்டும் நீர்வரத்து குறைந்து வருவதாலும், அதேபோல் ஒகேனக்கல் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை குறைந்ததால் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.

மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ள நிலையில், அணையின் நீர்வரத்து வினாடிக்கு 30,000 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 17,000 கன அடி நீரும், உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 13,000 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.

சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டத்துக்காக அணையில் இருந்து பாசனத்திற்காக காவிரி ஆற்றில் வினாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுவதால் அணை நீர்மட்டம் கடந்த 8 நாட்களாக தொடர்ந்து 120.10 அடியாக நீடிக்கிறது.

நீா் மட்டம் : 120.10 அடி

நீர்இருப்பு : 93.63 டி.எம்.சி