தொடர்ந்து சரியும் மேட்டூர் அணையின் நீர்வரத்து..

 

கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நேற்று 12,145 கன அடியாக வந்து கொண்டு இருந்த நீரின் அளவு இன்று 11,019 கன அடியாக குறைந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து பாசனத்திற்காக காவிரி ஆற்றில் விநாடிக்கு 5,000 கன அடியும், கால்வாயில் 650 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் உயர்ந்து வருகிறது.

நேற்று 75.290 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 75.760 அடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கும்பட்சத்தில் அணை நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீர்இருப்பு : 37.861 டி.எம்.சி