மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

 

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் பருவ மழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளதால் உபரி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இவ்வாறு திறக்கப்பட்ட தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. அதிகபட்சமாக வினாடிக்கு 16,000 கன அடி தண்ணீர் வரை வந்தது.

இந்த நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததால் அணைக்கு நீர் வரத்தும் சரிந்துள்ளது. நேற்று 16,301 கனஅடியாக இருந்த தண்ணீர் இன்று 11,794 அடியாக குறைந்துள்ளது.

அணையில் இருந்து பாசன தேவைக்காக வினாடிக்கு 12,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் நேற்று காலை 73.29 அடியாக இருந்தது. இது இன்று 73.47 அடியாக உயர்ந்துள்ளது.