தேனியில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு மருந்து பெட்டகம்! மாவட்டநிர்வாகம் அதிரடி !

 


தேனி மாவட்டத்தில் கொரோனாவின் 2வது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.இதனையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, பெரியகுளம், கம்பம், போடி அரசு மருத்துவமனைகள் மற்றும் 6 கொரோனா நல மையங்கள் , மேலும் இடைக்கால கொரோனா நல மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆரம்ப அறிகுறிகளுடன் இருப்பவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டும் வருகிறார்கள்.அந்த வகையில் தேனி மாவட்டத்தில் மட்டும் சுமார் 3500க்கும் மேற்பட்டவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த 2 வார காலமாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு மாத்திரைகள், கபசுர குடிநீர் பொடி, முக கவசம், சானிடைசர் போன்றவை அடங்கிய மருந்து பெட்டகம் தீர்ந்து போனதால் பலரும் மருந்து, மாத்திரைகள் கிடைக்காமல் தவித்து வந்தனர். தனியார் மருந்தகங்களில் மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டனர்.


உடனடியாக மாவட்ட நிர்வாகம் சார்பில் மருந்து பெட்டகம் ஏற்பாடு செய்யும் தீவிரப்படுத்தப்பட்டன. அதன்படி மருந்து, மாத்திரைகள் மொத்தமாக வாங்கப்பட்டு வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மருந்து குடோனுக்கு கொண்டு வரப்பட்டு அங்கு மருந்து பெட்டகம் தயாரிக்கும் பணி நடந்தது.
இதனையடுத்து 2 வார இடைவெளிக்கு பிறகு கொரோனா நோயாளிகளுக்கு மருந்து பெட்டகம் வழங்கும் பணி நடைபெற்றது.மேலும் தேனி மாவட்டத்தில் மருந்து, அவை தாமதமின்றி நோயாளிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்யவும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.