ஊரடங்கில் களைகட்டும் கள்ளச்சாராயம்!திருநெல்வேலியில் 5 பேர் கைது.!!

 

தமிழகத்தில் கொரோனா 2வது அலை பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஜூன் 7 வரை தமிழகம் முழுவதும் தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து மற்றஅனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.


அத்துடன் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. ஆனால் மதுபானப்பிரியர்கள் ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் இருந்து கள்ளத்தனமாக சரக்குகளை வரவழைத்து குடித்து வருகின்றனர். அத்துடன் சட்டவிரோதமாக மது விற்பனை, கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கள் இறக்குதல், போன்ற சம்பவங்களும் அதிகரித்து வருவதாக புகார்கள் காவல்துறைக்கு வந்து கொண்டு இருக்கின்றன.

அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம், மானூர் வனப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது ஐந்து பேர் கொண்ட கும்பல் ஊரல் போட்டு கள்ளச்சாராயம் காய்ச்சி கையும், களவுமாக பிடிபட்டனர்.


பின்னர் 5 பேரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர்கள் காய்ச்சிய கள்ளச்சாராயம் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது.