ரூ10,00,000ஐ விளையாட்டில் தொலைத்த விபரீதம்! இளைஞர் தற்கொலை !

 


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் புருஷோத்தமகுப்பம் காட்டுகொல்லையில் வசித்து வருபவர் சிவலிங்கம்.இவர் விவசாய பணி புரிந்து வருகிறார். இவரது மகன் 31 வயது ஆனந்தன்சென்னை ஐடி நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார்.

பொழுதுபோக்கிற்காக ஆனந்தன் ஆன்லைன் மூலம் செல்போனில் ரம்மி விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்தார். ஆன்லைனில் முதலில் நிறைய பணம் வந்தது.தொடர்ந்து பேராசை காரணமாக ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்தார்.


பெற்றோர்கள் கண்டித்தும் இதை மட்டும் அவரால் நிறுத்த முடியவில்லை. இரவு பகல் பாராமல் ஆன்லைனில் ரம்மி விளையாடுவதே கதியாக கிடந்தார். எந்நேரமும், எப்போதும் மொபைலில் ரம்மி விளையாடி வந்துள்ளார். சம்பள பணம் முழுவதையுமே ரம்மி விளையாட்டில் தொலைத்தார்.


கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.10 லட்சத்தை இழந்தார். கையில் இருந்த பணம் கரைந்த பிறகும் தெரிந்தவர்கள், நண்பர்கள் என ஒருவரி விடாமல் கடன் வாங்கி ரம்மி விளையானார். இதனால் அவருக்கு ரூ.6 லட்சம் கடன் சுமையும் ஏறியது.


உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போட ஆனந்தன் சொந்த ஊரான புருஷோத்தமகுப்பத்திற்கு வந்தார். அப்போது வீட்டில் பெற்றோரிடம் ரம்மி விளையாட்டு மூலம் ரூ.10 லட்சம் இழந்ததை தெரிவித்தார். அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர் திட்டி தீர்த்தனர். இனி ரம்மி விளையாட கூடாது எனக் கண்டித்தனர். மனமுடைந்த ஆனந்தன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


வெளியில் சென்றிருந்த வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது ஆனந்தன் தூக்கில் பிணமாக தொங்கினார். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

10 இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.ஆன்லைனில் 10 லட்சம் இழந்து பெற்றோர் கண்டித்ததும் தற்கொலை செய்து கொண்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.