செம்மர கடத்தல் ! சுற்றி வளைத்த காவல்துறை! கிடுக்கி பிடி விசாரனையில் கடத்தல் காரர்கள்!

 


உலகப்பிரசித்தி பெற்ற பெருமாள் ஆலயம் திருப்பதி. இங்கு சேஷமலை பகுதி அருகில் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு அதிரடிப்படை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வடமாலப்பேட்டை அஞ்சாரம்மா கோவில் பக்கத்தில் 6 பேர் கொண்ட கும்பல் செம்மரங்களை காரில் ஏற்றிக்கொண்டு இருந்ததாக ரகசிய தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கையும் களவுமாக திருட்டு கும்பலை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.


பிடிபட்டவர்கள் விபரம்


நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் வசித்து வரும் 29 வயதான பாலசுப்பிரமணியன்
திருவள்ளூர் மாவட்டம் பாகசாலை கிராமத்தில் வசித்து வரும் 34 வயதான சரவணன்
பள்ளிப்பட்டை சேர்ந்த ரமேஷ்
சென்னை திருவேற்காட்டில் வசித்து வரும் 47 வயதான ரமேஷ்
27 வயதான சஞ்சீவி
29 வயதான ராக்கி
43 வயதான ஸ்ரீஜித்


இவர்கள் 6 பேரும் சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டியதாக ஒப்புக் கொண்டனர். சென்னைக்கு கடத்தி செல்ல முயன்ற வேளையில் பிடிபட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.


மேலும் சம்பவ இடத்தில் கிடைத்த 4 பைக், ஒரு வேன், கார் இவைகளுடன் 11 செம்மரங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கு மூலகாரணம் யார்? இயக்கும் முக்கிய புள்ளி யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.