கலெக்டர் அதிரடி! பிணங்களை எரிக்க கட்டணக் குறைப்பு!

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி புதுகாமூர் பகுதியில் அமைதுள்ளது புத்திரகாமேஷ்டிவரர் கோவில் . இங்கு நகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள எரிவாயு தகன மேடையை போதிமரம் என்ற தொண்டு நிறுவனம் நிர்வகித்து வருகிறது.
இந்த அறக்கட்டளை வசூலிக்கும் தொகையில் 20 சதவீத தொகை ஆரணி நகராட்சிக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் வசூலிக்கும் தொகையில் வெறும் 100 ரூபாய் மட்டுமே நகராட்சிக்கு தனியார் தொண்டு நிறுவனம் செலுத்தி வந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பால் தினமும் 10க்கும் மேற்பட்ட பிணங்கள் எரிக்கப்பட்டு வருகின்றன.


சில தினங்களுக்கு முன்பு வரை பிணம் எரிப்பதற்கு ரூ.4200/- கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் இம்மாவட்ட கலெக்டர் எரிவாயு தகன மேடையில் ஒரு பிணத்தை எரிக்க ரூ.2000/- கட்டணம் என நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கலெக்டரின் இந்த நடவடிக்கைக்கு புகார் அளித்த சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் நன்றி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.