கொரோனா பரவும் அபாயம்! மின் கட்டணம் செலுத்த அலைமோதிய மக்கள் கூட்டம்!

தமிழகத்தில் கொரோனா 2வது அலை காரணமாக மே மாதம் ஊரடங்கு காரணமாக மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. சிறு, குறு தொழில்கள் மற்றும் தாழ்வழுத்த மின் நுகர்வோர் மின் கட்டணம் செலுத்த மே 31 வரை அவகாசம் வழங்கப் பட்டிருந்தது. இந்நிலையில் அந்த அவகாசம் ஜூன் 15 வரை நீட்டிப்பு செய்யப்பட்டது. மின் கட்டணத்தை இணையதளம், செல்போன் செயலி போன்ற ‘டிஜிட்டல்’ முறையில் எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் செலுத்தும் வசதி இருந்தாலும் இன்னும் பல
 


தமிழகத்தில் கொரோனா 2வது அலை காரணமாக மே மாதம் ஊரடங்கு காரணமாக மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. சிறு, குறு தொழில்கள் மற்றும் தாழ்வழுத்த மின் நுகர்வோர் மின் கட்டணம் செலுத்த மே 31 வரை அவகாசம் வழங்கப் பட்டிருந்தது. இந்நிலையில் அந்த அவகாசம் ஜூன் 15 வரை நீட்டிப்பு செய்யப்பட்டது.

மின் கட்டணத்தை இணையதளம், செல்போன் செயலி போன்ற ‘டிஜிட்டல்’ முறையில் எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் செலுத்தும் வசதி இருந்தாலும் இன்னும் பல இடங்களில் மக்கள் நேரில் வந்து மின் கட்டண மையங்களில் செலுத்தி வருவதையே வாடிக்கையாக வைத்துள்ளனர்.
இந்நிலையில் மின் கட்டண மையங்களில் அபராதமின்றி கட்டணம் செலுத்த கடைசி நாளான நேற்று மின் கட்டண மையங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. அந்த வகையில் விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு அருகில் உள்ள உதவி மின் பொறியாளர் அலுவலகங்களில் மின் கட்டண மையங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

இந்த மையங்கள் வழக்கம் போல் காலை 8.30 மணிக்கு திறக்கப்பட்டன. ஆனால் அதற்கு முன்பாகவே பொதுமக்கள் ஏராளமானோர் மின் கட்டணம் செலுத்த வரிசையில் காத்துக்கிடந்தனர். மின் ஊழியர்கள், காலை 8.30 மணி முதல் மின் கட்டணத்தை வசூலிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாலும் கூட்டம் அதிகமாக இருந்ததால் சமாளிக்க முடியவில்லை.


இவர்களில் பலர் முக கவசம், சமூக இடைவெளியை மறந்து நெருக்கமாக நின்று கொண்டிருந்தனர். அரசின் பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் காற்றில் பறக்க விடப்பட்டன. மின் கட்டணம் வசூலிக்கும் பணி வழக்கமாக மதியம் 2.30 மணிக்கெல்லாம் முடிவடைந்து விடும். ஆனால் நேற்று மாலை 4 மணி வரை மின் கட்டணம் வசூலிக்கப்பட்டாலும் பலர் மின் கட்டணம் செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். மின் கட்டணம் செலுத்தும் கால அவகாசத்தை சில நாட்கள் அரசு நீட்டிப்பு செய்ய வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.