15 நாட்கள் முழு ஊரடங்கு! மத்திய அரசு அதிரடி!

 


இந்தியாவில் பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. இருந்த போதிலும் கேரளா உட்பட சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அங்கு கட்டுப்பாடுகள் திவீரப்படுத்தப்பட்டு வருகின்றன.
கேரளாவில் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து மத்திய அரசு அங்கு முழு ஊரடங்கை அமுல்படுத்த பரிந்துரைத்துள்ளது.

கேரளாவில் பாதிப்பு அதிகரித்து வருவதால் அண்டை மாநிலங்களான தமிழகம் மற்றும் கர்நாடகாவுக்கு செல்வதற்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கேரளாவில் ஓணம் பண்டிகையை ஒட்டி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து தினசரி பாதிப்பு 30000க்கும் அதிகரித்து வருகிறது. இதனால் கேரளாவில் கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் சில பரிந்துரைகளை அளித்துள்ளது.

அதில் தற்போதைய நிலவரப்படி கேரளாவில் 85 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இதனால் அவர்களை கண்காணிப்பதில் சுகாதாரத் துரை சுணக்கம் காட்டி வருகிறது. வீட்டில் குணமடையும் நோயாளிகள் அனைத்து பாதுகாப்பு விதிகளையும் பின்பற்றுவதில்லை எனவும் அதனால் தான் கேரளாவால் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளது.


நாட்டின் மிக அதிக தினசரி தொற்றுள்ள மாநிலமாக கேரளா இருந்து வருகிறது. இதனால் அண்டை மாநிலங்களிலும் அதன் தாக்கத்தை உணர முடிகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். இதற்கு ‘ஸ்மார்ட்’ ஆன குறிப்பிட்ட முறையில் லாக்டவுனை அமல்படுத்தலாம்.
பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்து மாவட்ட அளவில் மட்டுமல்லாமல், தாலுகா அளவில் கூட கட்டுப்பாடுகளை அமல்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளது.