78வது சுதந்திர தினம்: செங்கோட்டையில் 11வது முறையாக தேசியக்கொடியேற்றுகிறார் பிரதமர் மோடி!
இன்று நாடு முழுவதும் 78வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று சுதந்திர தினவிழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி 11வது முறையாக கொடியேற்றி சுதந்திரதின உரையாற்ற உள்ளார்.
இவ்விழாவில் மாணவர்கள், இளைஞர்கள், விவசாயிகள், பழங்குடியினர், பெண்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட மத்திய அரசின் நலத் திட்டங்களால் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சுமார் 6,000 பேர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கவுள்ளனர்.
மத்திய அரசு சார்பில் இணையவழியில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வென்ற 3,000 பேரும், பல்வேறு மாநிலங்களில் இருந்து பாரம்பரிய உடையில் சுமார் 2,000 பேரும் இன்றைய சுதந்திர தின விழாவில் கலந்து கொள்கின்றனர். இதில் 23 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
டெல்லியில் சுதந்திரதின விழாவையொட்டி, பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரதமரின் இன்றைய சுதந்திர தின உரையில் மத்திய அரசின் செயல்திட்டம் மற்றும் புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்பு இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் பிரதமர்களான ஜவஹர்லால் நேரு 17 முறையும், இந்திரா காந்தி 16 முறையும் சுதந்திர தினத்தில் தேசியக் கொடி ஏற்றியுள்ளனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தொடர்ந்து 10 முறை தேசியக் கொடி ஏற்றியவர் என்ற பெருமைக்குரியவர். அந்த வரிசையில் தற்போது பிரதமர் மோடியும் இடம் பெற்றுள்ளார்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா