கேரளாவில் நாளை முதல் கூடுதல் தளர்வுகள் ஒரு பார்வை

 

கேரளாவில் ஏப்ரல் மாதம் இறுதியில் அமல்படுத்தப்பட்ட தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு இன்றுடன் முடிவடைகிறது. நாளை (வியாழக்கிழமை) முதல் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறைப் படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வு இல்லா முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.

  • மதுக்கடைகள், பார்கள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது.
  • ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து, அவரவருக்கு ஒதுக்கப்படும் நேரத்தில் மதுக்கடைகளுக்கு சென்று மது வாங்கி கொள்ளலாம்.
  • உள்ளூர் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
  • அனைத்து அத்தியாவசிய கடைகளும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.
  • அனைத்து பொது தேர்வுகளும் நடத்தப்படும்.
  • திருமணம், மரண நிகழ்ச்சிகளில் பங்கேற்க 20 பேருக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது.
  • நாளை முதல் அனைத்து மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் 25 சதவீத ஊழியர்களுடன் அனைத்து நாட்களிலும் இயங்கலாம்.
  • தலைமை செயலகத்தில் 50 சதவீத ஊழியர்கள் பணியாற்றலாம்.
  • வங்கிகள் திங்கள், புதன், வெள்ளி ஆகிய 3 நாட்கள் செயல்படலாம்.
  • ஓட்டல்களில் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி.
    மால்கள் திறக்க அனுமதி இல்லை.