ஆறுமுகசாமி ஆணையம்: எடுபடாமல் போன அப்போலோ வாதம்..!

 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான பின்னணியை விசாரிப்பதற்காக கடந்த ஆட்சிக் காலத்தில் ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது. இதை உடனடியாக கலைக்க வலியுறுத்தி அப்பல்லோ மருத்துவமனை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதன்மீதான விசாரணையை நீதிபதிகள் எஸ். அப்துல நசீர் மற்றும் கிருஷ்ண முராரி ஆகியோர் முன்பு விசாரிக்கப்பட்டது. இரு தரப்பு விவாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், இதுதொடர்பான தங்களுடைய உத்தரவுகளை தற்போது வழங்கியுள்ளனர்.

அதன்படி ஆறுமுகசாமி ஆணையத்தை கலைக்க முடியாது. அது தொடர்ந்து செயல்படும் என்று கூறி அப்பல்லோவின் கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. மேலும் வரும் 30-ம் தேதிக்குள் ஆணையல் செயல்பட மாற்று இடம் வழங்க வேண்டும் என்று அப்பல்லோவுக்கு உத்தரவிட்டு, நவ-30-ம் தேதி வழக்கை நீதிபதிகள் அமர்வு ஒத்திவைத்துள்ளது.