இன்று பந்த் எதிரொலி... 8ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை... புதுவை முதல்வர் அறிவிப்பு!

 

இன்று புதுச்சேரியில் இண்டியா கூட்டணி சார்பில் பந்த் போராட்டம் நடைபெற உள்ள நிலையில் அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு 8ம் வகுப்பு வரை விடுமுறை அறிவித்து முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரியில் மின்கட்டண உயர்வை ரத்து செய்ய கோரி இண்டியா கூட்டணி கட்சிகள் இன்று பந்த் போராட்டம் அறிவித்துள்ளனர். இதனால் இன்று புதுச்சேரியில் பேருந்துகள், ஆட்டோக்கள், டெம்போக்கள் ஆகியவை இயங்காது. ஆனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காது என்று ஆட்சியர் தெரிவித்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், 'பந்த் போராட்டம் காரணமாக பேருந்துகள், ஆட்டோக்கள் முழுவதுமாக இயங்குவதில் சிரமம் உள்ளது. அதனால் குழந்தைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார். பந்த் காரணமாக புதுச்சேரியில் தனியார் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!