அரசு ஊழியர்களுக்கு போனஸ்! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு.!

 


தீபாவளி பண்டிகை நவம்பர் 4ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. பல்வேறு தனியார் நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. மத்திய அரசும் அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்க ஒப்புதல் நேற்று அளித்துள்ளது.

மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் செலவுத் துறை, அலுவலக துணை குறிப்பில் மத்திய துணை ராணுவப் படைகள் மற்றும் ஆயுதப் படைகளின் ஊழியர்களும் இந்த போனஸ் பெற தகுதியானவர்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


இவர்களுடன் மார்ச் 31, 2021 வரை சேவையில் இருந்தவர்கள் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் தொடர்ச்சியான சேவையில் பணியாற்றிய ஊழியர்கள் இந்த போனஸ் பெற தகுதியுடையவர்கள். மேலும் உற்பத்தி அல்லாத பிரிவில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் ‘பி’ இல் பணிபுரியும் அனைத்து கெஜட்டட் அல்லாத ஊழியர்களுக்கும் போனஸ் பெறலாம்.


“தற்காலிக போனஸின் அளவு சராசரி ஊதியங்கள்/கணக்கீடு உச்சவரம்பின் அடிப்படையில் எது குறைவாக இருந்தாலும் அது கணக்கிடப்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.இது தவிர மார்ச் 31 க்கு முன்பு ராஜினாமா செய்தவர்கள், சேவையில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், பணிக்காலம் முடிந்த ஊழியர்கள், மருத்துவ அடிப்படையில் ஓய்வு பெற்றவர்கள், மார்ச் 31 க்கு முன்பு உயிரிழந்த அரசு ஊழியர்கள் இந்த போனஸ் பெறத் தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.