ஜகா வாங்கிய சென்னை உயர்நீதிமன்றம்! குழப்பத்தில் பொதுமக்கள்!

 


தமிழகத்தில் வாகன விபத்தை தவிர்க்கவும், வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது. அதன்படி புதிதாக வாங்கும் அனைத்து வாகனங்களும் பம்பர் டூ பம்பர் அடிப்படையில் 5 ஆண்டுக்கான காப்பீடு செய்யப்பட வேண்டியது கட்டாயம் என தெரிவித்திருந்தது.

இதனை உறுதி செய்யும்படி உயர்நீதிமன்றம் போக்குவரத்துத்துறைக்கு சுற்றறிக்கையும் பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் தற்போது அனைத்து வாகனங்களுக்கும் ’பம்பர் டூ பம்பர்’ என்ற அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கான காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என்ற உத்தரவை திரும்ப பெறுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.


மேலும் தற்போது இந்த திட்டத்தை உடனடியாக அமல்படுத்துவதற்கான சூழல் இல்லை.ஆனால் பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உரிய திருத்தங்களை அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது