சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம் எம் சுந்தரேஷ் உள்ளிட்டோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமனம்
Aug 27, 2021, 07:33 IST
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 124-ஆவது பிரிவின் இரண்டாம் உட்பிரிவு தமக்கு அளித்துள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி,
- கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அபய் ஸ்ரீநிவாஸ் ஓகா,
- குஜராத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி விக்ரம் நாத்,
- சிக்கிம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜிதேந்திர குமார் மகேஸ்வரி,
- தெலங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஹிமா கோஹ்லி,
- கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி பெங்களூர் வெங்கடராமைய்யா நாகரத்னா,
- கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சுடலையில் தேவன் ரவிகுமார்,
- சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம் எம் சுந்தரேஷ்,
- குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி பேலா மதூர்யா திரிவேதி
- வழக்கறிஞர் பமிடிகாந்தம் ஸ்ரீ நரசிம்மா
ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.