21 வயது மாணவியை கொன்று வீசிய கொடூரம்... போராட்டத்தில் குதித்த மாணவர்கள்!
21 வயதுடைய கல்லூரி மாணவியைக் கொன்று வீசியதால் நள்ளிரவில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தது கான்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் சைஃபி மருத்துவ பல்கலைக்கழகம் உள்ளது. பிரியா மிஸ்ரா (21) முதலாம் ஆண்டு பாராமெடிக்கல் மாணவி. இவர் அவுரியாவில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார். இவர் நேற்று தனது நண்பருடன் சென்று நீண்ட நேரமாகியும் விடுதிக்கு திரும்பவில்லை. அப்போது அவர் செல்போன் எடுத்துச் செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், பல்கலைக்கழகத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சோனை கால்வாய் பாலம் அருகே காயங்களுடன் பிரியா மிஸ்ரா சடலம் கிடப்பது குறித்து போலீசாருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்தது. இதையடுத்து எட்டாவா மூத்த காவல் கண்காணிப்பாளர் சஞ்சய் வர்மா தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரியாவின் உடலை மீட்டனர்.
இந்நிலையில், பிரியா மிஸ்ரா கொலைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி சைஃபி மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று இரவு நூற்றுக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கொலையாளிகளை கைது செய்யக் கோரி மாணவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.மாணவி பிரியா மிஸ்ரா கொலைக்கு சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தனது எக்ஸ் தளத்தில், பாஜக ஆளும் உத்தரபிரதேசத்தில் சைஃபி பல்கலைக்கழக மாணவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து உடனே உண்மையான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மாணவர்களின் போராட்டம் குறித்த வீடியோவையும் அந்த பதிவில் இணைத்திருந்தார்.இந்த நிலையில் பிரியா மிஸ்ராவை காதலித்த மகேந்திரா கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. பிரியா வீட்டுக்கு அருகில் வசித்து வந்த மகேந்திரனை பிரியா மிஸ்ரா காதலித்து வந்தார். இந்நிலையில் மகேந்திரனும், அவரது நண்பர் அரவிந்தும் சேர்ந்து அவரை கொன்றது தெரியவந்துள்ளது. கொலைக்கு பயன்படுத்திய காரை போலீசார் மீட்டு மகேந்திரனை இன்று கைது செய்தனர். தப்பி ஓடிய அரவிந்தை தேடி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!
பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!
திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்