அதிர்ச்சி... நண்பன் மீது மதுவை ஊற்றி தீ வைத்த நபர்கள்... போதையில் அட்டகாசம்!
நாகேஷ், வெங்கடசாமி, முனிராஜூ ஆகியோர் கர்நாடக மாநிலம் ஆனேக்கல் நகரில் உள்ள சஞ்சய் பாருக்கு குடிப்பதற்காக சென்றனர். அப்போது குடிபோதையில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது திடீரென வெங்கடசாமியும், முனிராஜும் நாகேஷ் மீது மதுவை ஊற்றி தீ வைத்து விட்டு தப்பியோடினர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பார் ஊழியர்கள் தீயை அணைத்தனர்.
இதையடுத்து, பார் ஊழியர்கள் நாகேஷை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்து வந்த ஆனேக்கல் போலீசார், மதுக்கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகேஷிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வெங்கடசாமியும், முனிராஜும் தன்னை தீ வைத்து எரித்ததாக அவர் தெரிவித்தார். தப்பி ஓடிய வெங்கடசாமி, முனிராஜை ஆனேக்கல் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!