பகீர்... 2ம் வகுப்பு மாணவனை பள்ளி கதவில் கட்டி வைத்து அடித்த ஆசிரியர்
ஒடிசா மாநிலம் கேந்திரப்பாரா மாவட்டம் மார்ஷாகாய் காவல் நிலைய பகுதிக்குட்பட்ட இடத்தில் தனியார் ஆங்கில வழி பள்ளி ஒன்றில் 2ம் வகுப்பறையில் மாணவன் ஒருவன் விளையாடி கொண்டு இருந்துள்ளான்.
மாணவன் படிப்பை கவனிக்காமல் விளையாடிக் கொண்டிருந்தது ஆசிரியருக்கு எரிச்சலை ஏற்படுத்திய நிலையில், அந்த 7 வயதுடைய மாணவனை தரதரவென இழுத்து சென்று பள்ளியின் நுழைவு வாசலில் இருந்த கதவில் கயிற்றால் கட்டி வைத்து அடித்து கடுமையாக தாக்கியுள்ளார்.
இது குறித்து தகவலறிந்து வந்த பிற ஆசிரியர்களும் அவருடன் சேர்ந்து கொண்டு சிறுவனை அடித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2ம் வகுப்பு என்பது குழந்தைகள் சுதந்திரமாக சிந்திக்க கற்றுத் தருகிற வயது. நமது கல்வி முறையில் மாற்றம் செய்யப்பட வேண்டியது மிக அவசியம், அவசரமும் கூட என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கொந்தளித்து வருகின்றனர். இது குறித்து தகவலறிந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!