மகனுக்கு 18 வயதாகும் வரை தந்தை தான் பொறுப்பு: உச்சநீதிமன்றம்..!!

 

டெல்லியைச் சேர்ந்த ராணு அதிகாரி வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தார். இது தெரியவந்ததும் அவருடைய மனைவி விவகாரத்து பெற்று பிரிந்துவிட்டார். மாதம் மாதம் மகனின் பராமரிப்பு செலவுக்காக ரூ. 50 ஆயிரம் வழங்க வேண்டும் என குடும்பநல நீதிமன்றம் ராணுவ அதிகாரிக்கு உத்தரவு வழங்கி இருந்தது.

விவகாரத்து பெற்ற நாள் முழுதல் முறையாக மனைவியின் கணக்குக்கு ராணுவ அதிகாரியிடம் இருந்து பணம் வந்துவிடும். ஆனால் சில மாதங்களாக அவர் பணம் வழங்காமல் இருந்துள்ளார். இதுகுறித்து கேட்ட போது, கணவன் மற்றும் மனைவிக்கு இடையே பிரச்னை எழுந்துள்ளது.

இதையடுத்து மனைவி உச்சநீதிமன்றத்தை நாடினார். இருதரப்புக்குமான வாதம் முடிவுற்று, இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, கணவன் மற்றும் மனைவி விவகாரத்து வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரிதான். 2019 டிசம்பர் முதல் 2021 நவம்பர் 30 வரை வழங்கப்படாமல் இருக்கும் தொகையை கணவர் 8 வாரங்களுக்குள் மனைவியின் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும்.

ஒருவேளை அவர் வழங்காத பட்சத்தில் நிலுவையுடன் கூடிய பராமரிப்பு தொகையை சேர்த்து கணக்கிட்டு மாதத் தவணையாக ஊதியத்தில் ராணுவ நிர்வாகம் பிடித்தம் செய்ய வேண்டும். அந்த பணத்தை தாயின் வங்கிக் கணக்குக்கு அனுப்ப வேண்டும் என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.