அடி தூள்! சூப்பர் நியூஸ்! வீடுகளுக்கு 40% வரை மானியம்!
மாசுக்கட்டுப்பாடு, புவி வெப்பமயமாதலைத் தடுத்தல் பசுமை குடில் என்று இயற்கையை மனிதன் நேசிக்க துவங்கியிருக்கிறது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய அரசு, மாசு கட்டுப்பாட்டைக் குறைக்கும் வகையில் மானியம் அளித்து வருகிறது. இந்நிலையில், வீடுகளின் கூரைகள் மீது சூரிய சக்தியை நிறுவும் நடவடிக்கையை ஊக்குவிப்பதற்காக, இந்த திட்டத்தை மத்திய அரசின் எரிசக்தி அமைச்சகம் அமல்படுத்துகிறது.
அடுத்த வருடத்திற்கு 4000 மெகாவாட் திறன் கொண்ட கூரைகள் மீதான சூரிய சக்தியை குடியிருப்பு துறையில் மானியத்துடன் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை, மத்திய எரிசக்தி மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ஆர் கே சிங் தெரிவித்தார்.
தனி வீடுகளின் கூரைகளில் 3 கிலோ வாட் வரை சூரிய சக்தியை நிறுவுவதற்கு 40% வரை மானியம் வழங்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர், 3 முதல் 10 கிலோ வாட் திறன் கொண்ட சூரிய சக்தி கருவிகளை நிறுவுவதற்கு 20% மானியம் அளிக்கப்படும் என்றார்.
குடியிருப்பு நல்வாழ்வு சங்கங்கள்/ குழு வீடுகளின் சங்கங்களுக்கு பொதுவான மின்சார வசதிகளுக்கு பயன்படுத்துவதற்காக நிறுவப்படும் 500 கிலோ வாட் திறன் கொண்ட சூரிய சக்தி உபகரணங்களுக்கு 20% மானியம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.