சத்தீஸ்கரில் துப்பாக்கிச்சூடு... 5 நக்சல்கள் சுட்டுக்கொலை... பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் படுகாயம்!

 
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்களுடனான துப்பாக்கிச்சூட்டில் நக்சலைட்டுகள் 5 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் பலத்த காயமடைந்தனர். 

சத்தீஸ்கரின் பஸ்தாரில் உள்ள நாராயண்பூர் எல்லையில் அமைந்துள்ள அபுஜ்மாத் காடுகளில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக நேற்று பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அந்த பகுதியில் பாதுப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

அப்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் நக்சலைட்டுகள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் இரண்டு பாதுகாப்பு படை வீரர்கள் படுகாயமடைந்தனர். அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. 

இது குறித்து சத்தீஸ்கர் மாநில போலீசார் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நக்சலைட்டுகள் பதுங்கி இருந்த பகுதிகளை அழிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.காட்டு பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் பலத்த காயமுற்றனர். அவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக விமானம் மூலம் ராய்ப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களின் உடல்நிலை சீராக இருக்கிறது. சத்தீஸ்கர் மாநிலம் முழுவதும் பாதுகாப்ப பலப்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!