லூகாஸ் டிவிஎஸ் நிறுவன முன்னாள் செயல் இயக்குநர் டி.டி.ரங்கசுவாமி உயிரிழப்பு!!

 

பிரேக்ஸ் இந்தியா நிறுவனத்தின் முன்னாள் செயல் இயக்குநர் டி.டி.ரங்கசுவாமி . இவருக்கு வயது 97. இவர் வயது மூப்பு காலமாக நேற்று அதிகாலை உயிரிழந்தார்.சுந்தரம் பைனான்ஸ் நிறுவனர் இவரை மும்பையில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்தார்.

இவர் சென்னையில் தொடங்கப்பட்ட லூகாஸ் டிவிஎஸ் நிறுவனத்தில் தலைமை பதவியில் இருந்தவர்.1963ல் பிரேக்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைமை பதவியில் ஓய்வுபெறும் வரை இருந்தார்.

இவர் டிவிஎஸ் குழுமத்தின் பிரேக்ஸ் இந்தியா, லூகாஸ் டிவிஎஸ் நிறுவனங்களில் 50 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியவர். இவருடைய மனைவி விமலா. டி.டி.நரேந்திரன் , டி.டி.சீனிவாச ராகவன் என 2 மகன்களும் உள்ளனர்.