பிராண்டட் மருந்துகளை காட்டிலும் ஜெனரிக் மருந்துகள் விலை மலிவு... தரம் பாதுகாப்பானதா?
புதிய மருந்துகள் சந்தையில் அறிமுகமாகின்ற போது, உற்பத்தியாளர் அதற்கான பிராண்ட் பெயரில் விற்பனை செய்யும் பிரத்யேக உரிமையைப் பெறுகின்றனர். ஆனால் காப்புரிமை காலாவதியான பிறகு, மற்ற நிறுவனங்கள் அந்த மருந்தை பொதுவான பெயர் (Generic Name) மூலம் தயாரித்து விற்பனை செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். பொதுவான பெயர் என்பது மருந்தின் மூலக்கூறின் பெயர்; உதாரணமாக பாராசிட்டமால் என்பது காப்புரிமையில்லாத பொதுவான மருந்தாக அமைந்துள்ளது.
பிராண்டட் ஜெனரிக் மருந்துகள் குறிப்பிட்ட பிராண்ட் பெயரில் விற்பனை செய்யப்படும் ஜெனரிக் மருந்துகள் ஆகும். உதாரணமாக பாராசிட்டமாலின் பிராண்டுகள் பனடோல், டைலெனால், கால்போல் போன்றவை. பொதுவான மருந்துகள் மலிவாக இருப்பது, அவை அசல் மருந்துகளின் நகலாக உருவாக்கப்படுவதால், புதிய சோதனை முறைகளை மீண்டும் செய்ய தேவையில்லாதது. இதனால், ஜெனரிக் மருந்துகள் அதிகளவில் விலை குறைவாகவும் பரவலாகவும் கிடைக்கின்றன.
உலகளாவிய மருந்து சந்தையை பொறுத்தவரை அமெரிக்காவில் மருந்து சீட்டுகளில் சுமார் 90% ஜெனரிக் மருந்துகள், இங்கிலாந்தில் 80% க்கும் மேற்பட்டவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில், சந்தையில் ஜெனரிக் மருந்துகள் குறைவாகவே 5% வரை மட்டுமே காணப்படுகின்றன. இதன் காரணமாக ஊழல் மற்றும் தரம் குறைந்த போலி மருந்துகள் நுகர்வோரைக் கட்டாயமாக பிராண்டட் மருந்துகளையே நம்ப வைக்கின்றன.
ஜெனரிக் மருந்துகள் அசல் பிராண்டட் மருந்துகளை காட்டிலும் சுமார் 95% வரை குறைந்த விலையில் கிடைக்கக்கூடியவை. உலக சந்தையில் மிகப்பெரிய அளவில் அதாவது 20% அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு இந்தியா பாதுகாப்பான ஜெனரிக் மருந்துகளை ஏற்றுமதி செய்கின்றன. சரியான ஒழுங்குமுறை சோதனைகள் மூலம் ஜெனரிக் மருந்துகள் பாதுகாப்பானவையாகவும், அசல் மருந்து போலவே பயனுள்ளதாகவும் இருக்கின்றன.