பெரும் சோகம்... மின்னல் தாக்கி 20 பேர் பலி!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதைப் போலவே, தற்போது குஜராத் மாநிலத்தில் பருவம் தப்பி பெருமழை பெய்து வருகிறது. இந்த தொடர்மழை காரணமாக மின்னல் தாக்கியதில் இருபதுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். விவசாய பயிர்களும் இந்த தொடர்மழையில் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன.
குஜராத் மாநிலத்தில் தெற்குப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் மின்னல் தாக்கியதில் இதுவரை இருபதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
படுகாயம் அடைந்தவர்களை மீட்பதற்காக உள்ளூர் நிர்வாகம் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் ” என்று தெரிவித்துள்ளார்.
மழை மேலும் சில நாட்கள் தொடரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பொதுமக்கள் மழைக்காலங்களின் போது வெட்டவெளிகள், மரங்களுக்கு கீழ் உள்ளிட்ட இடங்களில் நிற்க வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே தொடர் மழையால் பயிர்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதால் உரிய இழப்பீடு வழங்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
சபரிமலைக்குச் செல்பவர்கள் தினந்தோறும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!