சபரிமலை ஆன்லைன் க்யூ டோக்கன் பெறும் முறை!!

 


கார்த்திகை மாதம் தொடங்கியுள்ளது. இந்த காலகட்டத்தில் சபரிமலைக்கு விரதம் இருந்து சென்று வருகின்றனர். மண்டல மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நவம்பர் 15 முதல் திறக்கப்பட்டு தினமும் 30000 பேர் வரை தரிசனம் செய்து வருகின்றனர்.


தரிசனத்தை உறுதி செய்ய ஆன்லைன் மூலம் புக் செய்ய வேண்டும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. டிசம்பர் 26ல் மண்டல பூஜை நடைபெற உள்ளது. பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி கொள்ளா வண்ணம் ஆன்லைன் க்யூ முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


ஆன்லைன் டோக்கன் பெறுவது எப்படி?


https://sabarimalaonline.org/#/login என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பெயர், போன், போட்டோ, மெயில் ஐடி, பிறந்த தேதி தகவல்களை பதிவிட வேண்டும் . ஓடிபியால் இதனை உறுதி செய்ய வேண்டும்.
இதனை லாக் இன் செய்த உடன் Virtual Q பகுதியில் தரிசனம் மேற்கொள்வதற்கான டோக்கனை பெறலாம்.


ஒருவரா , குழுவா என்பதை பதிவிட்டு பெயர், போட்டோ, ஐடி கார்டு, மொபைல் எண், முகவரி, பிறந்த தேதி என அனைத்து தகவல்களையும் குறிப்பிட்டு போட்டோவை அப்லோட் செய்ய வேண்டும். தேதி, நேரம் பதிவு செய்ய வேண்டும். பிரசாதங்களை பெறவும் பணம் செலுத்தி புக் செய்து கொள்ளலாம். உடனடியாக Virtual Q கூப்பன் க்யூ ஆர் கோடோடு திரையில் தெரியும். மொபைல் எண்ணுக்கு வரும் தகவலை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ள வேண்டும்.