இணையதள சேவைகள் முடக்கம்!! பதற்றநிலை நீடிப்பு!!

 


இந்தியாவில் நாகலாந்து மாநிலத்தில் அமைந்துள்ளது மியான்மர் எல்லைப் பகுதி . இங்குள்ள மோன் மாவட்டத்தில் ஒடிங் என்ற கிராமத்தில் உள்ளது நிலக்கரி சுரங்கம். இங்கு பணி முடிந்து தொழிலாளர்கள் சிலர் வேன் ஒன்றில் வீடு திரும்பி கொண்டு இருந்தனர்.அங்கு பயங்கரவாத எதிர்ப்பு கும்பல் ஒன்று வந்து கொண்டிருந்தது. இவர்கள் வேனில் வந்த தொழிலாளர்களை கிளர்ச்சியாளர்கள் எனக் கருதி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அப்பகுதி மக்கள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் நாகலாந்து முதல்வர் மக்கள் அமைதி காக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
தற்போது அங்கு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து சிறப்பு விசாரணைக்குழு மூலம் விரிவான விசாரணை நடத்தப்படும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதியும், உரிய நிவாரணமும் கிடைக்க வழி செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறிப்பிட்ட இணையதள சேவைகள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. தாக்குதல் சம்பவம் குறித்து வதந்திகள் பரவுவதை தடுக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக நாகலாந்து அரசு விளக்கம் அளித்துள்ளது.