மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 3% அகவிலைப்படி உயர்வு!

 


இந்தியா முழுவதும் நவம்பர் 4ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
கொரோனா காரணமாக 2020 முதல் அகவிலைப்படி உயர்த்தப்படாமல் இருந்தது.

இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 11 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது.தற்போது ஜூலை மாதத்திற்குரிய அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தப்படுவதாக மத்திய அரசு முடிவு அறிவித்துள்ளது. ஏற்கெனவே 28 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 31 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது


இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் அனைவருக்கும் 3 % அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும். இதனை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்துள்ளார்.இதன் மூலம் சுமார் 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.