100 படுக்கை வசதிகள் கொண்ட நடமாடும் மருத்துவமனைகள்! அதிரடி அறிவிப்பு!

 


தமிழகத்தில் கொரோனா 2 வது அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு இந்தியா முழுவதும் சுகாதார கட்டமைப்புகளை வலுப்படுத்த முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் பிரதம மந்திரி ஆயுஷ்மான் பாரத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்
பிரதம மந்திரி ஆயுஷ்மான் பாரத் சுகாதார கட்டமைப்பு திட்டத்தின்கீழ் கண்டெய்னர் அடிப்படையிலான 2 நடமாடும் மருத்துவமனைகள் அமைக்கப்படும். இந்த மருத்துவமனைகள் சென்னையிலும், டெல்லியிலும் ஏற்படுத்தப்படும். இந்த மருத்துவமனையில் தலா 100 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டிருக்கும். இதனை அவசர காலத்தில் விமானத்திலும், ரயில்களிலும் கூட எடுத்துச்செல்லலாம் என்பது கூடுதல் வசதி.


தெற்காசியாவில் இப்படி கண்டெய்னர் அடிப்படையிலான நடமாடும் மருத்துவமனைகள் உருவாக்கப்படுவது இது இரண்டாவது முறை
ஆயுஷ்மான் பாரத் சுகாதார திட்டம் இந்தியா முழுவதும் சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான மிகப்பெரிய திட்டம். இதன் நோக்கம், பொது சுகாதார உள்கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள இடைவெளிகளை நிரப்புவதே. நகர்ப்புற, கிராமப்புறங்களில் முதன்மையான வசதிகளையும் ஏற்படுத்துவது இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் 11024 நகர்ப்புற சுகாதார, நல்வாழ்வு மையங்கள் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.