ஐதராபாத்தில் மிதமான நிலநடுக்கம்

 

ஐதராபாத்தின் தெற்கு பகுதியில் இந்திய நேரப்படி இன்று 26-07-2021 அதிகாலை 05:00:53 மணியளவில் சுமார் 156 கிலோ மீட்டர் தொலைவில், 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.