கிரிப்டோ கரன்சிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!!

 

இந்தியாவில் 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல்களில் வெற்றி பெறும் முனைப்புடன் மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. நவம்பர் 29ம் தேதி பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.


இந்த கூட்டத்தொடரில் மொத்தம் 29 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் மசோதா முக்கியத்துவம் பெறுகிறது. அதேபோல் தனியார் கிரிப்டோ கரன்சிகளும் கட்டுப்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். டிஜிட்டல் கரன்சியை நடைமுறைப்படுத்தவும் மசோதா தாக்கல் செய்யப்படும்.

இந்த தொழில்நுட்பத்தை ஆதரவளிக்கும் வகையில் சில நிறுவனங்களுக்கு மட்டும் வாய்ப்பு வழங்கப்படும்.சமூக வலைதளங்களில் கிரிப்டோகரன்சி குறித்த வாதங்கள் பல பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. ஆர்பிஐ உடன் இது குறித்து பிரதமர் கலந்து ஆலோசித்து வருகிறார்.