பணம் திருடு போகாமல் இருக்க புது டெக்னிக்! எஸ்பிஐ அதிரடி!

 

பொதுவாக பணம் எடுக்க ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. கார்ட் தொலைந்து விட்டால் வங்கிக்கு போன் செய்து கார்டை செயலிழக்கச் செய்வோம்.தொழில்நுட்ப ரீதியாகப் பணத்தை பாதுகாக்க எஸ்பிஐ வங்கி புதிய நடைமுறையினை கொண்டு வந்துள்ளது. அதன்படி எஸ்பிஐ ஜனவரி 2020 முதல் இரவு நேரங்கஈல் ஏடிஎம்மில் எடுக்கும் பணத்திற்கு ஓடிபி வசதியைக் கொண்டு வந்தது.

அதன்படி இரவு 8 மணி வரை காலை 8 மணி வரை, 10,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தால் அங்கீகரிக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். இதனை பதிவிட்டு தான் பணம் எடுக்கமுடியும். இதன் மூலம் பணத்திருட்டை தடுக்க முடியும் என்ற காரணத்தால் தற்போது 24 மணி நேரமும் இந்த வசதியை எஸ்பிஐ கொண்டு வந்துள்ளது.


அதன்படி, இனி எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் ரூபாய் 10000க்கு மேல் பணம் எடுப்பவர்கள், பதிவு செய்த மொபைலுக்கு வரும் ஓடிபி எண்ணையும் பதிவிட வேண்டும்.
பணம் எடுக்கையில், கார்டை செலுத்தியதும், வழக்கம் போல பின் நம்பரை பதிவிட வேண்டும்.


எடுக்க விரும்பும் பணத்தை குறிப்பிட வேண்டும்.
உடனடியாக மொபைல் எண்ணுக்கு, ஓடிபி நம்பர் வரும்.
அந்த ஓடிபி நம்பரை, ஏடிஎம் திரையில் பதிவிட்ட பிறகு தான் பணத்தை எடுத்திட முடியும்.
இதன் மூலம், ஏடிஎம் மையத்தில் நடைபெறும் மோசடிகளை தவிர்த்து விடலாம் என வங்கி ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். நாடு முழுவதும் எஸ்பிஐ வங்கிக்கு, 22224 கிளைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.