இனி போர்ட் ப்ளேயர் கிடையாது... பெயரை மாற்றி அறிவித்தார்  அமித் ஷா!

 
இனி அந்தமானின் தலைநகர் பெயர் போர்ட் ப்ளேயர் கிடையாது. ஸ்ரீ விஜய புரம் என்று புதிதாக பெயர் மாற்றி அறிவித்தார் மத்திய அமைச்சர் அமித் ஷா. 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களைக் கொண்ட இந்தியாவில், அந்தமான் நிக்கோபார் தீவுகள் 8 யூனியன் பிரதேசங்களின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. இந்நிலையில் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேரின் பெயரை மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமரின் தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்டு, காலனி ஆதிக்கத்தில் இருந்து நாட்டை விடுவிப்பதற்காக போர்ட் பிளேரின் பெயரை ‘ஸ்ரீ விஜய புரம்’ என மாற்ற முடிவு செய்துள்ளோம். முந்தைய பெயர் காலனித்துவ பாரம்பரியத்தைக் கொண்டிருந்தாலும், 'ஸ்ரீ விஜய புரம்' நமது சுதந்திரப் போராட்டத்தில் அடைந்த வெற்றியையும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் தனித்துவமான பங்கையும் குறிக்கிறது.

நமது சுதந்திரப் போராட்டத்திலும் சரித்திரத்திலும் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு இணையற்ற இடம் உண்டு. ஒரு காலத்தில் சோழப் பேரரசின் கடற்படைத் தளமாக இருந்த இந்தத் தீவுப் பகுதி இன்று நமது மூலோபாய மற்றும் வளர்ச்சி அபிலாஷைகளுக்கு முக்கியமான தளமாக உள்ளது. "இந்த இடத்தில்தான் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நமது திரங்காவின் முதல் திறப்பு விழாவையும், வீர் சாவர்க்கரும் பிற சுதந்திரப் போராட்ட வீரர்களும் சுதந்திர தேசத்துக்காகப் போராடிய செல்லுலார் சிறையும் இதுவே என குறிப்பிட்டுள்ளார்.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!