ரேஷன் அட்டைதாரர்களுக்கு 14 பொருட்களுடன் ஓணம் பரிசு தொகுப்பு இலவசம் | கேரளத்தில் ஓணம் கொண்டாட்டம்!
கேரளத்தில் ஓணம் கொண்டாட்டம் களை கட்டத் துவங்கியுள்ளது. அனைத்து மஞ்சள் ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடைகளிலும் 14 பொருட்கள் அடங்கிய இலவச ஓணம் பரிசு தொகுப்பு வழங்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள சுமார் ஆறு லட்சம் மஞ்சள் (AAY) அட்டைதாரர்களுக்கும், வயநாடு பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் இந்த ஓணம் கிட் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நல நிறுவனங்களில் வசிக்கும் என்பிஐ கார்டுதாரர்களுக்கு அதிகாரிகள் நேரடியாக ஓணம் கிட்களை வழங்கி வருகின்றனர். ஓணம் கிட் வழங்கும் மாநில அளவிலான தொடக்க விழா பேரூர்கடை பாபுஜி நூலக அரங்கில் அமைச்சர் ஜி.ஆர்.அனில் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
பச்சைப்பயறு, சேமியா பாயசம் மிக்ஸ், மில்மா நெய், முந்திரி பருப்பு, தேங்காய் எண்ணெய், சாம்பார் பொடி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், தேயிலை தூள், கொண்டைக்கடலை, துவரம் பருப்பு, துணி பை உள்ளிட்ட 14 பொருட்கள் ஓணம் கிட்டில் இடம் பெற்றுள்ளன.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா