உஷார் மக்களே... ஆன்லைன் கேமிங் ஆஃப் மூலம் ரூ.400 கோடி மோசடி.. பொறியாளர் உள்பட 4 பேர் கைது!
ஆன்லைன் கேமிங் ஆஃப் மூலமாக ரூ.400 கோடி வரை மோசடி செய்யப்பட்டிருப்பது தொடர்பாக போலீசார் பொறியாளர் உட்பட 4 பேரைக் கைது செய்துள்ளனர். அவசரப்பட்டு தெரியாத மொபைல் ஆஃப்களில் பணத்தை செலுத்தாதீங்க. ஆன்லைன் கேமிங் ஆப்களில் ஈடுபடுவதைத் தவிர்த்திடுங்க. பலர் பங்குச்சந்தை முதலீடு என்று லட்சங்களில், கோடிகளில் ஆன்லைன் மூலம் இழந்துள்ள நிலையில், கேமிங் ஆப் மூலமாக பலரை ஏமாற்றியதாக கொல்கத்தாவில் உள்ள கோசிபூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில், பணமோசடி சட்டத்தின் கீழ் அமலாக்க இயக்குனரகம் விசாரணை நடத்தியது. விசாரணையில், 'பைவின்' என்ற சூதாட்ட செயலி, 400 கோடி ரூபாய் சம்பாதித்து, சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தை, 'ஃபைனான்ஸ்' என்ற சர்வதேச கிரிப்டோ வர்த்தக தளம் மூலம், சீனாவில் உள்ள தனிநபர்களுக்கு அனுப்பியது தெரியவந்தது.
ஐபி முகவரியை ஆய்வு செய்ததில் அவர்கள் சீனாவில் இருந்து செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் சென்னை பொறியாளர் உள்பட 4 பேரை அமலாக்கத்துறை நேற்று கைது செய்தது. சென்னை பொறியாளர் மீது ரூ.75 கோடிக்கு சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கைது செய்யப்பட்ட 4 பேரையும் அமலாக்கத்துறை காவலில் எடுத்துள்ளது. மேலும், தற்போது கைதாகியுள்ள நால்வரையும் டெலிகிராம் ஆப் மூலம் சீனாவை சேர்ந்த சிலர் தொடர்பு கொண்டதாக தெரிகிறது. சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் சிறப்பு நீதிமன்றம் நான்கு பேரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா