குட்நியூஸ்! ஆன்லைன் பணபரிவர்த்தனை வரம்பு உயர்வு! ஆர்பிஐ அதிரடி!

 


இந்தியாவில் பணபரிவர்த்தனையில் உடனடியாக பரிமாற்றம் செய்யும் வகையில் அவ்வப்போது புதிய அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது இணையதள வங்கி சேவைகளில் NEFT, IMPS, RTGS சேவைகள் மூலம் உடனக்குடன் பணபரிவர்த்தனை செய்யலாம்.


இந்நிலையில் இந்த சேவையை மேலும் மேம்படுத்தும் வகையில் ரிசர்வ் வங்கி தனது நாணய கொள்கை கூட்டத்தின் மூலம் மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி IMPS பணப் பரிமாற்ற சேவையில் இதுவரை ஒரே நாளில் அதிகப்படியாக 2 லட்சம் ரூபாய் வரை பணப்பரிமாற்றம் செய்ய முடியும்.

தற்போது இந்த அறிவிப்பின் மூலம் இந்த வரம்பு 5 லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ஏற்கனவே IMPS மற்றும் NEFT மூலம் பணப் பரிமாற்றம் செய்வதை விடுமுறை தினமின்றி எல்லா நாளும் 24 மணி நேரமும் செய்யலாம் என சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப் பட்டிருந்தது. தற்போது இந்தப் பணப் பரிவர்த்தனை வரம்பு மேலும் அதிகரிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.