இந்திய – பாகிஸ்தான் எல்லையில் பிறந்த ’பார்டர்’.!!

 

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பலம் ராம் மற்றும் நிம்பு ராய் தம்பதி இந்தியாவிலுள்ள புனித தலங்களுக்கு சென்று வழிபடுவதற்காக இந்தியா வந்துள்ளனர்.

சாமி கும்பிட்டுவிட்டு பாகிஸ்தானுக்கு திரும்ப முடிவு செய்துள்ளனர். அவர்கள் இந்தியா – பாகிஸ்தன எல்லைப் பகுதியான அட்டாரியை அடைந்த போது, ராணுவ சோதனை நடவடிக்கைகள் தாமதமடைந்தன.

குறிப்பிட்ட சில ஆவணங்கள் இல்லை என்று கூறி தம்பதிகளை ராணுவத்தினர் தடுத்தி நிறுத்தினர். சில ஆவணங்கள் சரியாக இல்லை என்று கூறி பாகிஸ்தான் ராணுவம் இவர்களை நாட்டுக்குள் பிரவேசிக்காமல் தடுத்து விட்டது.

இதனால் அங்குள்ள கூடாரத்தில் தங்கிருந்துள்ளனர். அப்போது கடந்த 2-ம் தேதி நிறைமாத கர்ப்பிணியான நிம்பு ராய்க்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவ வசதிகள் கிடைத்ததும், தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்தியா பாகிஸ்தான் எல்லையில் குழந்தை பிறந்ததால், தங்களுடைய மகனுக்கு ‘பார்டர்’ என்று பெயர் வைத்துள்ளனர் தம்பதிகள். முன்னதாக இதுபோன்ற சம்பவங்கள் ஏற்கனவே இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நடந்துள்ளது.

அதன்படி லக்யா ராமுக்கு கடந்தாண்டு ஆண் குழந்தை இதே இடத்தில் பிறந்தது. அதன்படி குழந்தைக்கு பெற்றோர் ‘பாரத்’ என்று பெயர் வைத்தது குறிப்பிடத்தக்கது.