தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசிகளுக்கான விலை பட்டியல் வெளியீடு! மத்திய அரசு!

 


இந்தியா முழுவதும் கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனையடுத்து தடுப்பூசி செலுத்தும் பணிகள் நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஜூன் 21 முதல் மத்திய அரசே தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு வழங்கும் என பிரதமர் மோடி ஆற்றிய உரையில் அறிவித்துள்ளார்.


மேலும் தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசிகள் பிரித்து வழங்கப்படும். ஆனால் நிர்ணயிக்கப்பட்ட விலையை காட்டிலும் அதிக விலைக்கு விற்கும் மருத்துவமனைகளை மாநில அரசுகள் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி மத்திய அரசு தடுப்பூசிகளுக்கான விலை குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில்
கோவிஷீல்டு ஒரு டோஸ்-ரூ 780/-
கோவாக்சின் ஒரு டோஸ்- ரூ1410/-
ஸ்புட்னிக் வி -ரூ 1,145/-
தனியார் மருத்துவமனைகள் கட்டணமாக வசூலிக்கலாம். இந்த விலையில் மருந்திற்கான வரியும், சேவை வரியும் அடங்கும்.ஆனால் இத்துடன் சேவை கட்டணமாக, 150 ரூபாயை வசூலித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.