அதிர்ச்சி... சிறுவனைக் காப்பாற்ற குதித்ததில் இளம்பெண் உட்பட 5 பேர் ஏரியில் மூழ்கி உயிரிழப்பு!
குஜராத் மாநிலம் பதான் மாவட்டம் வடவலி கிராமத்திற்கு அருகே உள்ள ஏரியில் அந்த பகுதியில் உள்ள மக்கள் குளித்து செல்வது வழக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த ஏரி அருகே பெரோஷா என்ற பெண் அதே கிராமத்தை சேர்ந்த சிறுவர், சிறுமிகளுடன் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது சிறுவன் ஒருவர் ஏரிக்குள் இறங்கிய நிலையில், தவறுதலாக ஏரியில் விழுந்துள்ளான்.
சிறுவனின் அலறல் சப்தம் கேட்ட பெரோஷா உள்பட எஞ்சிய 4 பேரும் சிறுவனைக் காப்பாற்றுவதற்காக ஏரிக்குள் குதித்துள்ளனர். இதில் 5 பேரும் ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஏரியில் விழுந்த 5 பேரின் கூச்சல் சத்தம் கேட்டு கிராம மக்கள் திரண்டு சென்று அனைவரையும் மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். 5 பேரையும் பரிசோதித்த மருத்துவர்கள், அனைவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!