மாநில அரசு அதிரடி ! இனி ஊரடங்கு கிடையாது! பள்ளிகள் திறப்பு!

 


இந்தியா முழுவதும் கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது . பாதிப்புக்களுக்கேற்ப மாநிலங்கள் ஊரடங்கில் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்திலும் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

பாதிப்புக்கள் குறைந்த நிலையில்படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நாளை முதல் ஊரடங்கு முற்றிலும் நீக்கப்படுவதாகவும்,இனி எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது என தெலுங்கானா அரசு அதிடியாக அறிவித்துள்ளது. இதனால் அம்மாநில மக்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.


ஜூலை 1ம் தேதி முதல் அனைத்து கல்வி நிறுவனங்களையும் திறக்கவும் அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக முழு அளவில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும், மாணவர்களை நேரடி வகுப்புகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் எனவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.


மேலும், ஊரடங்கின்போது விதிக்கப்பட்ட அனைத்து வகையான கட்டுப்பாடுகளையும் முழு அளவில் அகற்றும்படி அனைத்து துறைகளுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது. ஜூன் 18 நேற்றைய நிலவரப்படி தெலுங்கானாவில், கொரோனா பாதிப்பு விகிதம் 1.14 சதவீதமாக குறைந்துள்ளது.

மாநிலம் முழுவதுமே தினசரி பாதிப்பு 1400 ஆகவும், உயிரிழப்பு 12 கவும் இருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும் பொதுமக்கள் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், எனவும் அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அம்மாநில முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.