undefined

திடீரென துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்கள்.. கனடாவில் இந்திய தொழிலதிபர் உட்பட 2பேர் பலி!

 

கனடாவின் தெற்கு எட்மண்டனில் உள்ள கவானாக் பவுல்வர்டு என்ற இடத்தில் ஒரு சிலர் கூடினர். அப்போது வந்த மர்ம நபர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே கீழே விழுந்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் தென்மேற்கு பிரிவு ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

இதில், படுகாயம் அடைந்த 3 பேர் உயிரிழந்தனர். இதில் 49 மற்றும் 57 வயதுடைய 2 பேர் உயிரிழந்துள்ளனர். 51 வயதுடைய நபர் ஒருவர் பலத்த காயங்களுடன் கிடந்துள்ளார். மருத்துவ உதவியாளர்கள் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.துப்பாக்கிச் சூடு நடந்தபோது சுமார் 50 பேர் கூடியிருந்தனர். அவர்களில் பலர் தெற்காசிய வீடு கட்டுமான சங்கத்தின் உறுப்பினர்களை சேர்ந்தவர்கள்.

இதனையடுத்து எட்மன்டன் நகர முன்னாள் கவுன்சிலரும், முன்னாள் எட்மன்டன் காவல்துறை அதிகாரியுமான மொஹிந்தர் பங்கா சம்பவ இடத்தை பார்வையிட்டார்.அவர்களில் ஒருவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பூட்டா சிங் கில் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கில் பில்ட் வெரம்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். 2 பேரின் பிரேத பரிசோதனை இன்று அல்லது நாளை நடைபெறும் என போலீசார் தெரிவித்தனர். எட்மன்டன் போலீசார் விசாரிக்கின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்