மத்திய அரசை விளாசி தள்ளிய சுப்ரீம் கோர்ட்!!பகீர் உண்மைகள்!!

 


கடந்த சில வாரங்களாகவே இந்தியாவின் தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாகவே கடுமையான காற்று மாசுபாடு நிலவி வருகிறது. இந்நிலையில், டில்லியில் காற்று மாசுபாடு குறித்து சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.


இதில் தலைநகரில் வீட்டில் இருக்கும் போது கூட முகக்கவசம் அணிய வேண்டி உள்ளது. காற்று மாசை கட்டுப்படுத்த அவசர நடவடிக்கைக்கு என்ன திட்டம் வகுத்துள்ளீர்கள் . காற்று மாசு அளவை குறைப்பதற்கான உங்களின் திட்டம் என்ன..?” என மத்திய – மாநில அரசுகளுக்கு கேள்வி எழுப்பப்பட்டது.

“தேவைப்பட்டால் டில்லியில் 2 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்துங்கள்” எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.தலைநகரில் காற்று மாசு மிகவும் மோசமாக இருப்பதை ஒப்புக்கொண்ட டில்லி அரசு, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளது. இதையடுத்து, காற்று மாசுபாட்டை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.