அடுத்த அதிர்ச்சி... ஆம்புலன்ஸில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை... நடுரோட்டில் தூக்கி வீசிய கொடுமை!

 

நாடு முழுவதும் சமீபமாக பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில், லக்னோவில் ஓடும் ஆம்புலன்சில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் உதவியாளர், அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆம்புலன்ஸில் இருந்த அந்த பெண்ணின் கணவருக்கு சப்ளையாகிக் கொண்டிருந்த ஆக்சிஜனை துண்டித்து, நடுரோட்டில் இருவரையும் வீசிச் சென்ற கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி, உயிருக்கு ஆபத்தான நோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் உள்ள தனது கணவரை பார்க்க பெண் ஒருவர் சென்றிருந்தார்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாததால், கணவரை அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்து விட்டு, தனியார் ஆம்புலன்சில் மனைவி தனது கணவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றார். இந்நிலையில், ஆம்புலன்ஸை பாதி வழியில் நிறுத்தி விட்டு, ஓட்டுநரும் உதவியாளரும் அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இளம்பெண் அவர்களுக்கு ஒத்துழைக்க மறுத்ததால், அவர்கள் அந்த பெண்ணின் கணவரின் ஆக்ஸிஜன் ஆதரவை துண்டித்து, ஆம்புலன்ஸில் இருந்து இருவரையும் வெளியே தள்ளினர். ஆக்சிஜன் சப்போர்ட் இல்லாமல் பெண்ணின் கணவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

அந்த பெண் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த வழக்கில், தலைமறைவான ஆம்புலன்ஸ் உதவியாளர் ரிஷப் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். ஆம்புலன்ஸ் டிரைவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா