அதிர்ச்சி வீடியோ... சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட 70 வயது கடைக்காரர்!

 

யாரையும் நம்பி உங்கள் குழந்தைகளைத் தனியே அனுப்பாதீங்க. வயதானவர், உறவினர், பக்கத்து வீடு, இது ஆண் குழந்தைத் தானே என்று யாரையுமே நம்பி குழந்தைகளைத் தனியே அனுப்பாதீங்க. பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் ஆண் குழந்தைகளுக்கும் பாலியல்  சில்மிஷங்கள் நெருங்கிய, நன்கு அறிமுகமானவர்களால் தரப்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் சீதாபூர் மாவட்டத்தில் 70 வயது கடைக்காரர் ஒருவர் 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலான நிலையில், கடைக்காரர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் சிறுமி வீட்டுப் பொருட்களை வாங்குவதற்காக குற்றம் சாட்டப்பட்டவரின் கடைக்கு சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. கடையில் அமர்ந்திருக்கும் 70 வயதுடைய முதியவர் பழங்குடியின சிறுமியை அநாகரீகமாக தொடுவதைக் அந்த வீடியோவில் காணலாம். இது குறித்து தகவல் அறிந்த சிறுமியின் தாயின் புகாரின் பேரில், தாராபத்பூர் காவல் நிலைய கிராமத்தைச் சேர்ந்த முகமது அன்வரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது குறித்து கூடுதல் எஸ்பி சீதாபூர் பிரகாஷ் குமார் கூறுகையில், அன்வார் மீது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகள் பாதுகாப்பு (போக்சோ) சட்டம், பட்டியலிடப்பட்ட சாதி மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதாவின் (பிஎன்எஸ்) தொடர்புடைய விதிகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா