பகீர் வீடியோ... ரயில் விபத்தில் இருந்து நூலிழையில் தப்பிய சந்திரபாபு நாயுடு!
இந்த வயதிலும் சுழன்றடித்து நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார் முதல்வர் சந்திரபாபு நாயுடு. கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு 12 மணிக்கு படகில், தண்ணீர் நிறைந்த பகுதியில் சென்று ஆய்வு மேற்கொண்டார். நிவாரண பணிகளில் ஈடுபட்டவர்கள், இந்த நேரத்தில் வந்திருக்கீங்க ஐயா என்று கேட்டதற்கு, நீங்க எல்லாம் சாப்பிட்டிருக்க மாட்டீங்க இல்லையா? என்று படகில் அவர்களுக்கு எடுத்துச் சென்ற உணவு பொட்டலங்களைத் தந்தது மக்களை நெகிழ செயது. இந்நிலையில், நிவராண பணிகளை மேற்கொண்டு பார்வையிடும் போது நூலிழையில் ரயில் விபத்தில் இருந்து தப்பித்த வீடியோ வைரலாகி வருகிறது.
சில இடங்களில் வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளதால், நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்கள் வீடுகளுக்குத் திரும்பி வருகின்றனர். படகு மற்றும் ஜேசிபி மூலம் வெள்ளம் பாதித்த பகுதிகளை சந்திரபாபு நாயுடு பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். விஜயவாடாவின் மதுரா நகரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை சந்திரபாபு நாயுடு பார்வையிட்டார்.
ரயில் தண்டவாளம் அருகே உள்ள பாலத்தில் நின்று கொண்டிருந்தார். அதே நேரத்தில் திடீரென ரயில் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்து வெள்ள நிவாரண நிதியாக முதல் தவணையாக ஐந்தாயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு வழங்க வேண்டும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வருகிறது.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா