இன்று டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள்!!

 


இந்தியாவின் சட்ட மேதை பாபா சாகேப் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் 1891, ஏப்ரல் 14ல் பிறந்தார்.இவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே தம் வாழ்நாள் முழுவதும் குரல் கொடுத்தவர். அவர்களுக்காக கழகம் ஒன்றையும் உருவாக்கியவர். இவர் உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் என பன்முகத் திறமையாளராக திகழ்ந்தவர். அதே போல் ஆசிரியர், இதழாளர், எழுத்தாளர், சமூகநீதிப் புரட்சியாளர் என அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்தவர்.


‘திராவிட புத்தம்’ இயக்கத்தின் மூலம் தலித் மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தது பெரும் புரட்சியாக இருந்தது. இந்திய அரசியலமைப்புச் சாசனத்தின் வடிவமைப்பாளர் இவரே. இத்தனை பெருமைகளை கொண்ட அம்பேத்கர் 1984ல் நீரிழிவு நோயால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டார். இதனை சீராக்க எடுத்துக் கொண்ட வீரியமான மருந்துகள் உடலில் மிகக் கடுமையான பக்கவிளைவுகளை ஏற்படுத்தின. அதனாலேயே கண்பார்வை மங்கத் தொடங்கியது. 1954ல் சில மாதங்கள் படுத்த படுக்கையானார்.


1955 தொடக்கம் முதலே இவர் உடல்நலம் மிக மோசமான நிலையை எட்டியது. இருந்த போதிலும் விடாமல் எழுதிக்க்கொண்டிருந்தார். புத்தரும் அவரின் தம்மாவும் என்ற புத்தகத்தை எழுதிய 3 நாட்களிலேயே 1956 டிசம்பர் 6 ம் தேதி டெல்லியில் இவரது வீட்டில் தூக்கத்திலேயே உயிர் பிரிந்தது