டெல்லியில் வரலாறு காணாத மழை

 

தலைநகர் டெல்லியில் கடந்த 19 ஆண்டுகளில் முதல்முறையாக செப்டம்பர் மாதத்தில் நேற்று மிக அதிக மழை பெய்துள்ளது. ஒரேநாளில் 112 மில்லிமீட்டர் மழை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு 2002ல் செப்டம்பர் 13ம் தேதி 126.8 மிமீ மழை பெய்துள்ளது.

டெல்லி மற்றும் புறநகர்ப்பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இன்று காலை முதலே வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.