இன்று கிரகண நேரத்தில் என்ன செய்யக் கூடாது? என்ன செய்யலாம்?

 


இன்று டிசம்பர் 4 சனிக்கிழமை முழு அமாவாசை. இந்த ஆண்டின் மிக நீண்ட கடைசி சூரியகிரகணம். இந்த கிரகணத்தால் நன்மைகளை விட கெடுதல்களே நடக்க இருப்பதாக ஜோதிட வல்லுனர்கள் கணித்துள்ளனர். இந்தியாவில் சூரிய கிரகணத்தை நேரில் பார்க்க முடியாது. இருந்த போதிலும் அதன் தாக்கம் இருக்கும் இதனால் சில விஷயங்களை தவிர்ப்பது நல்லது.


இந்த கிரகண நேரத்தில் சமையல் செய்ய கூடாது. சாப்பிடக்கூடாது. தண்ணீர் கூட குடிக்காமல் இருப்பது நன்மை. நகம் கிள்ளக் கூடாது. இறைநாமம் சொல்லிய படி அமர்ந்திருந்தால் எந்த கெடுதலும் அண்டாது. கர்ப்பிணிகள் வெளியே நடமாடக் கூடாது என சாஸ்திரங்கள் கூறுகின்றன.


எதை செய்யலாம்?


கிரகணம் தொடங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பே சாப்பிட்டு முடித்துவிட வேண்டும். முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு விலக்கு உண்டு. கிரகண காலத்தில் கோவில்களில் நடை அடைக்கப்படும். இருந்த போதிலும் இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது என்பதால் கோவில்களில் நடை அடைக்கப்படாது.

கிரகண காலங்கள் சங்கடங்களை விளைவிப்பவை. இதனால் தீங்கு நேர்ந்து விடலாம். இந்த நேரத்தில் கடவுள் நாமாக்களை சொல்லலாம். இந்த கடவுள் என்று இல்லை. நமக்கு விருப்பமான கடவுளின் எந்த நாமாவை நம்பிக்கையோடு சொன்னாலும் நன்மை தான்.


ஓம் கணபதியே நமஹா
ஓம் சரவண பவ
ஓம் சிவாய நமஹ
யோசெள வஜ்ரதரோ தேவ ஆதித்யானாம் ப்ரபுர்மதா:|
ஸஹஸ்ர சந்த்ர நயன க்ரஹ பீடாம் வ்யபோஹத்||


இவை தவிர நமக்கு தெரிந்த மந்திரங்கள் அத்தனையும் தொடர்ந்து ஜெபித்து வர பல கோடி மடங்கு பலன் கிட்டும் . இதனால் நம்மை பிடித்திருக்கும், பிடிக்கப் போகும் தோஷங்கள் விலகும்.
கிரகணம் முடிந்த பின்னர் தலைக்கு குளிக்க வேண்டும். வீட்டில் விளக்கேற்றி வழிபாடு செய்யலாம்.
கர்ப்பிணி பெண்கள் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது. படியில் அமரக் கூடாது. கிரகண நேரத்தில் உணவு எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது உத்தமம்.